Mangalyam Thanthunanena

a free matrimonial blog for IYERS/IYENGARS AND ALL BRAHMINS INCLUDING TELUGU, KANNADA, MAHARASHTRA. OUR AIM IS TO HELP EACH OTHER IN FINDING SUITABLE MATCH FOR OUR LOVED ONES. PLEASE CONTACT DIRECTLY TO THE NUMBER GIVEN BY THE POSTS. WE DO NOT TAKE ANY RESPONSIBILITY AND WE REQUEST YOU TO VERIFY BEFORE PROCEEDING.

Monday 13 June 2016

குருபகவான் திருத்தலத்தின் சிறப்பம்சங்கள்

ஆலங்குடி குரு பகவான் 
தல வரலாறு,சிவ வழிபாடு,

குருபகவான் திருத்தலத்தின் சிறப்பம்சங்கள்
திருவாரூர் மாவட்டத்தில்
வலங்கைமான் வட்டத்தில்
நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்குவடக்கே7கி.மீ., தொலைவிலும்,
கும்பகோணம் மன்னார்குடி
(நீடாமங்கலம் வழி) பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ., தொலைவிலும் மிகவும் பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமாகிய ஆலங்குடி 
மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

ஆலங்குடி வரலாறு - குரு பகவான் தல வரலாறு:
பாற்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால்
ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.

சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி 
அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட மக்கள் தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு 
மங்கள அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

முசுகந்தன் என்ற 
சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் 
கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும். ஒருமுறை திருவாரூரை 
ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு 
எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

தல மூர்த்திகள்:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், 
காசி ஆரண்யேஸ்வரர்.
அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை.
அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி
அருள்மிகு கலங்காமற் 
காத்த விநாயகர்.

ஆலங்குடி கோயில்மகிமைகள் :

ஆதிசங்கரர் குரு மூர்த்தியை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன்முதலிய அஸ்டதிக்கு பாலகர்கள்
இறைவனை வழிபட்டு தம் பெயரால்தீர்த்தமும், 
சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்க பேறு பெற்றார்கள்

குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள்ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், 
குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள்பெறுவர். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குருஹோரை மற்றும் 
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.

குரு பகவானுக்கான நவக்ரஹ ஸ்தலமான ஆலங்குடிக்கு பக்கத்தில் 
ஏனைய எட்டு நவக்கிரக ஸ்தலங்களான திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோயில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) ஆகியவை அமைந்துள்ளன.

குரு பகவானுக்கு உகந்தவை:

ராசி : தனுசு, மீனம்
அதி தேவதை : வியாழன்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
உலோகம் : தங்கம்
மலர் : முல்லை
ரத்தினம் : புஷ்பராகம்
ஸ்தல விருட்சம் : பூலைச்செடி

நன்றி
இனிய காலைவணக்கம்
வாழ்க வளமுடன் நலமுடன்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।
   
 
 
                 
 hari krishnamurthy K. HARIHARAN)"'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.